ரோம் நகரம் எரியும் போது உண்மையிலேயே நீரோ ஃபிடில் வாசித்தாரா?

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (00:01 IST)
நீரோ இசைக்கருவியான லைர் வாசிப்பதிலும் பாடல் பாடுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். மேடையில் நடிப்பதையும் அவர் விரும்பினார். ஆனால் ரோமப் பேரரசரின் தகுதிக்கு இவை பொருத்தமில்லாதவை என்று செனட்டினர் கருதினர்.

ஆனால் நீரோ அதைப் பொருட்படுத்தவில்லை, கிரேக்கத்திற்குச் செல்ல ஒரு வருடம் விடுமுறை எடுத்தார், அங்கு அவர் நாடகப் போட்டிகளில் பங்கேற்றார்.மேடையில் ஒரு சோகமான கதையில் கதாநாயகியாக நடித்தபோதெல்லாம் நீரோ அவர் தனது இரண்டாவது மனைவி போபியாவின் முகமூடியை அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. அவரது கொலை காரணமாக அவர் துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் சிக்கித் தவித்தார் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

மக்கள் விரோதியின் நாடகத்துவமான மரணம்
அவர் 30 வயதை எட்டிய நேரத்தில், நீரோவின் எதிர்ப்பும் கெட்ட பெயரும் பெரிதும் அதிகரித்தன. இராணுவத்தின் ஆதரவுடன், செனட் நீரோவை "மக்களின் எதிரி" என்று அறிவித்தது, இது ஒரு வகையில் அவரது மரணத்தை அறிவித்தது, அதாவது நீரோ கண்ட இடத்தில் கொல்லப்படலாம் என்று பொருள். பாதுகாப்பு அதிகாரிகள் பின் தொடர்ந்துவர, நீரோ இரவின் இருளில் தப்பி ஓடி, நகரின் புறநகரில் உள்ள தனது அரண்மனைகளில் ஒன்றில் மறைந்து தற்கொலை செய்து கொண்டார்.நீரோ தனது உயிரை மாய்த்துக் கொண்டபோது, அவரது கடைசி வார்த்தைகள் 'குவாலிஸ் ஆர்டிஃபெக்ஸ் பேரியோ' என்று கூறப்படுகிறது. நீரோவின் கடைசி தருணங்களில் பேசப்பட்ட இந்த வார்த்தைகளின் சரியான பொருளைக் குறிப்பிடுவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம்:

"என் மரணத்தில் கூட நான் ஒரு கலைஞன்""என்னுடன் இறப்பவர் எப்பேர்ப்பட்ட கலைஞர் !""நான் ஒரு வர்த்தகனைப் போல இறக்கிறேன்"நீரோவின் இந்த வார்த்தைகளின் பொருள் என்னவாக இருந்தாலும், அவரது கடைசி வார்த்தைகள் அவரைப் போலவே நாடக பாணியில் இருந்தன என்று கூறினால் அது மிகையாகாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்