எல்லா செய்திகளும் உண்மையானதா? ஃபேக் நியூஸ் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

சனி, 10 நவம்பர் 2018 (12:15 IST)
ஃபேக் நியூஸ் அல்லது போலியான செய்தி என்பது தற்போது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான போலி செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்படுகிறது. 
 
சமீபத்தில் கூட குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவிய போலி செய்தியை அனைவரும் நம்பி அப்பாவிகளை அடித்து கொன்ற சம்பவம் நமது நாடு முழுவதும் அறிந்த ஒன்றே. 
 
இது போன்ற சில மோசமான நிகழ்வுக்கு பின்னர் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் போலி செய்திகள் பரப்படுவதை தடுக்க சில அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டன. 
 
அந்த வகையில், இந்த போலி செய்திகளின் ஆதிக்கம், மக்களுக்கு மத்தியில் செய்திகள் மீதான நம்பிக்கைதன்மையை குறைக்க கூடாது என்ற காரணத்திற்காக பிபிசி செய்தி நிறுவனம் ஃபேக் நியூஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை வரும் நவம்பர் 12 ஆம் தேதி நடத்த உள்ளது. 
 
இந்தியா மற்றும் கென்யாவில் நடைபெறும் இந்த நிகழ்வில் (#BeyondFakeNews) போலி செய்திகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்