தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி ; தினகரனுக்கு 2ம் இடம் : கருத்துக்கணிப்பில் தகவல்

திங்கள், 11 ஜூன் 2018 (20:30 IST)
தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்படும் எனவும் ஸ்பிக் அவுட்லேட் மீடியா நெட்ஒர்க் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

 
ஸ்பிக் அவுட்லேட் மீடியா நெட்ஒர்க் கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.  அந்த கருத்துக்கணிப்பின் முடிவின் படி:
 
அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுக படுதோல்வி அடையும். ஆட்சி அமைக்கும் அளவிற்கு திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு மொத்தம் 16 இடங்கள் கிடைக்கும். அதேபோல், டிடிவி தினகரன் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறும். அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்படும். ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் கட்சி மக்களிடையே பிரபலமடைந்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.
 
கன்னியாகுமாரி தொகுதியில் இந்த முறை பொன்.ராதாகிருஷ்ணனால் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. 
 
சட்டசபை தேர்தலில் திமுக 114, டிடிவி கட்சி 57, அதிமுக 41, காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெறும்.  அதேபோல், பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு 7 இடங்களும், திமுகவிற்கு 24 இடங்களும், டிடிவி தினகரன் கட்சி 6 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பில் முடிவில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்