உலகின் 3-வது பெரும் பணக்காரர் அமேஸான் தலைவர்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (20:22 IST)
அமேஸான் இணையதளம் மூலமாக பெருமளவிலான வருமானம் மற்றும் பங்குச் சந்தையில் அந்நிறுவனத்துக்குக் கிடைத்த ஊக்கம் ஆகிய காரணங்களால் உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை அமேஸான் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜெஃப் பெஜோஸ் பெற்றிருக்கிறார்.
 

 
அமேஸான் நிறுவனத்தில் பெஜோஸ் 18 சதம் பங்குகளை வைத்திருக்கும் நிலையில், வியாழக்கிழமையன்று பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் இரண்டு சதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 65.3 பில்லியன் டாலர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூறுகிறது.
 
ஆய்வாளர்களின் அனுமானத்தையும் மீறி, அமேஸான் நிறுவனத்தின் வருமானம் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், கடந்த ஆண்டு வளர்ச்சியைக் காட்டிலும் 31 சதம் அதிகரித்துள்ளது. கடந்த 2015-ல் 92 மில்லியன் டாலராக இருந்த லாபம் இந்த ஆண்டு 857 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அமேஸான் பங்குகள் கடந்த பிப்ரவரியில் இருந்து 50 சதம் அதிகரித்துள்ளது.
 
பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில், மைக்ரோஸாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் (78 பில்லியன் டாலர்), அடுத்த இடத்தில் ஜாரா நிறுவனர் அமான்சியோ ஓர்டிகா (73.1 பில்லியன் டாலர்) ஆகியோர் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்