புத்தாண்டு ராசிபலன் 2024: கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (08:42 IST)
உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் கன்னி ராசி அன்பர்களே நீங்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.



இந்த ஆண்டு பலவிதமான சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். மனச்சங்கடங்களைச் சமாளித்து விடுவீர்கள். என்றாலும், பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். குடும்ப நலம், தாம்பத்திய வாழ்க்கை சீராக இருக்கும்.  உங்களுக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் பலமிழந்து போக வாய்ப்புண்டு. எனினும் சான்றோரை சந்தித்து வாருங்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவி உறவு கெட இடமில்லை. துன்பங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உத்தரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்தரவைப் பெற பொறுமை காப்பது அவசியம். பொருளாதாரச் சங்கடம் உருவாகாது. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது.

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வருவதற்கான அமைப்பு உண்டு. நல்லோர் நேசமும், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி உண்டு. நில புலன்களில் எந்த விதமான வில்லங்கமும் உருவாக இடமில்லை. மெத்தப் படித்த மேலோர் சமூகத்தில் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதோடு, கணிசமான பொருளும் பெற்றும்
கலைத்துறையில் மகிழ்ச்சி உண்டு.  அவர்களின் அன்றாடப் பணி தொய்வின்றி நடக்க வாய்ப்புண்டு. எழுத்தாளர்களுக்கு உரிய வாய்ப்பு கிட்டும். கொடுக்கல் - வாங் கலில் நிதானம் இருக்கட்டும்.

அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் சமத்காரமாக நடந்து கொண்டு நற்பெயர் பெற வாய்ப்புண்டு. பொதுவாக கெடுதல்கள் ஏற்படுமானாலும், அந்தக் கெடுதல்கள் அவ்வளவாக பாதிக்காது. உழைப்பு வீண் போனது போலத் தோன்றலாம். ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை பெறவும் வாய்ப்புண்டு.

பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.  குடும்ப சுபிட்சம், தாம்பத்திய உறவு சீராக இருக்கும்.  சுப காரியங்கள் நடக்க இடமுண்டு. குறிப்பாக திருமணம் நடக்கும். மக்கட்பேறு உண்டாகவும் இடமுண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் ஏற்றம் பெறுவர். உடல் நலம் நல்லவிதமாக இருக்கும். மனதில் சலனம் ஏற்படலாம். தேவையில்லாத எண்ணங்கள் தோன்றலாம். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். 

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த ஆண்டு அலுவலர்கள் விரும்பத்தகாத உத்தரவுகள் பெற இடமுண்டு. குறிப்பாக  இடமாற்றம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் அவசரப்பட்டால் அவப்பெயரையே சம்பாதிக்க நேரும். அரசு விரோதத்தைச் சம்பாதிக்காதிருப்பதில் கவனமாய் இருங்கள். தீமைகளைத் தோற்றுவிப்பதில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் முனைந்து நிற்பார்கள். கவனம் தேவை. தெளிவான ஆலோசனையும், முயற்சியும் உங்களை அனைத்து கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்றும்.

ஹஸ்தம்:
இந்த ஆண்டு வியாபாரிகள் லாபம் காண்பர். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண் டாகலாம். நன்மைகள் சற்றுத் தூக்கலாக நடக்கும். அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை உருவாக இட மில்லை. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. வேதம் அறிந்த விற்பனர்கள் போற்றப்படுவார்கள். எனினும் உஷார் தேவை. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாடப் பணிகள் தட்டுத் தடுமாறி நடக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:
இந்த ஆண்டு வியாபாரிகள் மிகுந்த அலைச்சல் பட்டே சிறிதளவு லாபம் காண்பர். தொழில் மாற்றம் அல்லது தொழிலில் சலனம் ஏற்படலாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் பாதிப்பு உண்டாகாது. நன்மைகள் உண்டாக குரு அருள்வார். மாணவர் - ஆசிரியர் உறவு நல்லிணக்கம் பெறும். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கலைத் துறை சுறுசுறுப்படையும். குடும்பத்தில் சுமுகம் நிலவும். சுபகாரியம் ஒன்று நடக்கலாம். நன்மைகளும், தீமைகளும் கலந்தவாறு நடக்கவே செய்யும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி  வரவும்.

சிறப்பு பரிகாரம்: புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

செல்ல வேண்டிய தலம்: திருவெண்காடு, சபரிமலை, பாபநாசம் சொரிமுத்தையனார்.
சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் சம் ஸ்ரீசாஸ்தாயை நம:”.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்