புத்தாண்டு ராசிபலன் 2024: தனுசு ராசியினருக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (08:52 IST)
நேர்மையுடனும் தீரத்துடனும் நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள்.



இந்த ஆண்டு பொருளாதார நிலையில் எந்தச் சிக்கலும் வராது. அன்றாடப் பணிகள் நிறைவேறும். ஆனால், அதற்காக அதிகப்படியாக உழைக்க வேண்டியிருக்கும். பெரியோர் நல்லாசியைப் பெற்று வாருங்கள். தருமப்பணிகளில் ஈடுபட்டு வாருங்கள். உங்களுடைய வாழ்வில் உன்னத நிலை அடையக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். பணம் சேரும். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வர லாம். அதனால் பயன் உண்டாகவும் வாய்ப்புண்டு. குடும்ப சுபிட் சம் சீராக இருக்கும். செல்வ நிலை, குடும்ப சுபிட்சம், தாம்பத்திய மகிழ்ச்சி எல்லாம் சீராக இருக் கும். கணவன் - மனைவியரிடையே கருத்து வேற்றுமை எழ இடம் தராதீர்கள். பிள்ளைகளை சற்று கவனமுடன் கண்காணிப்பது அவசியம்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்துக் கண்டிக்க நேரலாம். நண்பர்களில் நல்லவர்களை இனம் கண்டு பழகினால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள் ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் கடமையாற்ற வேண்டியிருக்கும்.

வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைபடாது. விவசாயிகளுக்குப் பிரச்சினை ஏதும் உருவாகாது. உபத்திரவம் அவ்வளவாக இருக்காது. இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் தொல்லை இல்லை. ஆதாயம் ஏற்பட இடமுண்டு. தொழில்கள் மேன்மையடையும். முதலாளி - தொழிலாளி உறவு பலப்படும்.

அரசியல்வாதிகள் அவசரப்படாமல் காரியமாற்றி நற்பெயரைக் காத்துக்கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பல விதமான நற்பலன்கள் ஏற்படக் கூடிய நிலை உண்டென்றாலும், அந்த நன்மைகளைப் பெறுவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கும்.

கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். உழைப்பாளிகளுக்குச் சோதனை இருக்காது. என்றாலும் கடுமையாக உழைத்து உரிய வருவாயைப் பெற வேண்டியிருக்கும். ஓரிரு சங்கடங்கள் ஏற்படுமானாலும், சாமர்த்தியமாக அதனைச் சமாளிக்கக் கூடிய வழியும் புலப்படும்.

பெண்களுக்கு கௌரவம் ஓங்கும். புகழ் கிடைக்கும். பணக் கஷ்டம் உண்டாகாது. முயற்சிகள் தீவிரம் அடையும். சுறுசுறுப்போடு இயங்கக் கூடிய உங்களை, சில தீய நண்பர்கள் திசை திருப்பி விட நேரலாம். நல்லவர்களை இனம் கண்டு இயங்குங்கள். பெரியோர் நல்லாசியைப் பெறுங்கள்,

மூலம்:
இந்த ஆண்டு தொழிலில் தொய்வு உண்டாகாமல் காக்கும். வியாபாரிகளுக்குப் லாப கரமாக அமையும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் வரும். மகசூல் திருப்தி தரும். மருத்துவர்கள் புகழ் பெறுவர். முதலாளி - தொழிலாளி உறவில் சிக்கல் உண்டாகாது என்றாலும் சலசலப்பு ஏற்பட இடம் தரவேணடாம். குடும்ப விஷயங்கள் எல்லாம் சீராக அமையும். நற்பலன்கள் விளைவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கவே செய்யும். குறிப்பாக யாரிடமும் தகராறு செய்யாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பூராடம்:
இந்த ஆண்டு உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை இருப்பதால் கண் வலி, நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகளுக்கு உள்ளாக நேரலாம். எனவே நேரம் பார்த்து உணவு உட்கொள்வதும், ஓய்வு எடுப்பதும் அவசியம். கலை, கல்வித்துறைப்பணிகள் மேலோங்கும். அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது. பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்ப சுபிட்சம் நல்லவிதமாகவே இருக்கும். அளந்து பேசுவது மிகவும் அவசியம். அவசரப்படாமல் இருப்பதும் அவசியம்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த ஆண்டு யாரிடமும் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உண்டு. அதனால் நற்பலனும் உண்டாகும். உடல் நலம் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் பிறகு பூரண குணம் பெறும். எது எப்படியிருந்தாலும் அன்றாட வாழ்வில் சுபிட்சம் பாதிக்கப்படாது. கலை, கல்வி சம்பந்தப்பட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்குப் புகழ் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களுக்கு ஏற்றம் உண்டு. லாபமும் இருக்கவே செய்யும். குடும்ப நலம், தாம்பத்திய சுகம் எல் லாம் சீராக இருக்கும்.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். 
சிறப்பு பரிகாரம்: சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். ஊற வைத்த் நாட்டு கொண்டைக்கடலையை (மூக்கடலை)  உங்கள் கையால் கோர்த்து குருவிற்கு அர்ப்பணிக்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருவானைக்காவல்
சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் சம் குருவே நம:”.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்