2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கும்பம்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (15:32 IST)
இந்த ஆண்டு நிரந்தர வருவாய் வரும் தொழில் அமையும். வெளியூர் பயணங்களை அடிக்கடி செய்து செய்தொழிலில் வளர்ச்சி  காண்பீர்கள். செய்கின்ற காரியங்களில் ஏற்படும் இடையூறுகளை சீரிய முயற்சிகளால் வெற்றியடையச் செய்வீர்கள். உறுதியுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள்.

சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். சார்ந்துள்ள துறையில்  பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் அறிவுரையால் தொழிலில் புதிய நுட்பங்களைப் புகுத்துவீர்கள். நண்பர்களும் உங்கள்  ஆலோசனைகளைக் கேட்டு நடப்பர்.
 
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள்  சற்று அதிகரிக்கும். அதனால் சிக்கனத்தைக் கையாளவும். இதனால் புதிய ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் வேலை செய்யும்  பக்குவம் உண்டாகும். உங்கள் பேச்சில் சிறிது தற்பெருமை தலை தூக்கும். பயணங்கள் செய்யும்போது புதிய இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும். வம்பு வழக்குகளில் விட்டுக் கொடுத்து சமாதானமாகவே போகப் பார்க்கவும்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் நன்கு உழைப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையில் பங்கெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் அனாவசிய விரோதம்  எதுவும் வேண்டாம். சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும். பொறுமையுடனும் கடமை உணர்ச்சியுடனும்  பணியாற்றுவீர்கள்.
 
வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களைத் திருப்திகரமாக முடிப்பார்கள். இடையூறுகள் தோன்றினாலும் அவைகளைச் சமாளித்து வெளிவந்து விடுவீர்கள். காலதாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் நிறைவடைந்துவிடும்.
 
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும் ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப்  பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகளும் வரும்.
 
கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். அதில் திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் வரும்.
 
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிட்டும். பிரச்னைகள் உண்டாகும்போது பொறுமையுடன் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும். 
 
மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு  வேண்டாம். மற்றபடி ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.
 
பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.  சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும். கிழக்கு, வடக்கு ஆகிய  திசைகள் அனுகூலமாக இருக்கும். சூரியன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை அளிப்பனவாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்