அக்டோபர் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (14:34 IST)
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

 
கிரகநிலை:
தனவாக்கு ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.
 
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
18ம் தேதி சூர்ய பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23ம் தேதி செவ்வாய் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி புதபகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31ம் தேதி சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
 
இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். ராசிக்கு 3ல் சூரியன் சஞ்சாரம் இருப்பதால் நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.
 
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
 
கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
 
பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.
 
மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
 
மகம்:
இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.  பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும்  அவர்களால் உதவியும் கிடைக்கும்.
 
பூரம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.
 
உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்:  18, 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்:  3, 4, 5

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்