அக்டோபர் மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – தனுசு!

Prasanth Karthick
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (09:31 IST)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
06-10-2024 அன்று புதன் தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
14-10-2024 அன்று சுக்கிரன்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
17-10-2024 அன்று சூர்யன் தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2024 அன்று செவ்வாய் களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-10-2024 அன்று புதன் தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப் படாமல் தனித்தன்மையுடன் விளங்கும்  தனுசு ராசியினரே

இந்த மாதம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட  பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல் கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில்  ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள்.

குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். தம்பதிகளுக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

பெண்களுக்கு உங்களது  செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதக மான பலன்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டு வார்கள். சக மாணவர் மத்தியில் மதிப்பு கூடும்.

பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்