நவம்பர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (14:20 IST)
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
 
கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன் -  பஞ்சம  ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன, சயன,  போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.
16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
 
தோல்விகளை வெற்றியின் படிகளாக கருதி எதை பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் மன உறுதி கொண்ட மகர  ராசிக்காரர்களே இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும்.  உஷ்ணம்  சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. 
 
தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய  ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம்  காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது  நல்லது. முக்கியமாக மேலதிகாரிகளிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றவும். 
 
கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள்  உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் தங்களை  அனுசரித்து செல்வார்கள். 
 
பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான  பேச்சு லாபம் தரும். நீண்ட நாட்களாக  இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நீங்கும். 
 
மாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை. நண்பர்களுடன் நிதானமாக பழகுவதும் நன்மை  தரும். 
 
அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு  வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது.
 
கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும்  நீங்கும்.
 
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம்  உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.
 
திருவோணம்:
இந்த மாதம்  மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
 
அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த மாதம்  கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு  விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
 
பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 30.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்