ஜூலை 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (17:18 IST)
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
ராசியில் குரு (வ) -  தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ, சூர்யன்   -  தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, சனி (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
பலன்:
பொருள் தேடும் வழியில் அருளையும் நாடிச் செயல்படும் எண்ணம் நிறைந்த மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. கறாரான செயல்பாடுகளால் மட்டுமே பொருளாதார வரவுகளை பெற முடியும். இல்லையால் பலரது பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். இப்பொழுது உள்ள கிரகநிலையில் சாந்தகுணம் பாதியும், உக்கிர குணம் பாதியுமாக கலந்திருக்கும். சூழ்நிலகளிக்கேற்ப எதை பயன்படுத்தினால் வெற்றி என்பதை உணர்ந்து செயலாற்றி தக்க புகழைப் பெறுங்கள். 
 
குடும்பத்தில் வெகு காலமாக ஆண்பிள்ளை புத்திரப்பேறு எதிர்பார்ப்பில் உள்ள தம்பதியருக்கு குல தெய்வ அருளால் அனுகூல பலன் கிடைக்கும். பூமி, மனை, விவசாய நிலம் போன்றவைகளில் தகுந்த கவனம் செலுத்தி நல்ல வருமானம் பார்ப்பீர்கள். உடன் பிறந்தோரிடம் அனுசரனையாக இருப்பது எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் வரவழைக்காது. 
 
தொழிலதிபர்கள் உங்கள் தொழிலிலும், செயல்பாட்டிலும் பிறரது குறுக்கீடு இல்லாமல் செயல்பட்டு தகுந்த வெற்றி பெறுவீர்கள். தந்தையின் பேச்சுக்கு ஏற்றபடி செல்வதும், மூத்த அனுபவசாலிகள் பேச்சுக்கு மரியாதை தருவதும் உங்கள் வெற்றிக்கு அடிகோலாய் அமையும். உங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இப்பொழுது மிக அவசியம்.
 
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு தேவையான ஒன்றை வாங்கிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள்.  
 
கலைத்துறையினர் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம். உடன் இருப்பவர்களை கண் காணிக்க வேண்டி வரும். திறமை சாலிகள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து உடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால கனவுகளை நிறை வேற்ற துணை இருப்பார்கள்.
 
அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். புதிய மாற்றங்களை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திப் போடுவது நிம்மதி அளிக்கும். பிரிந்து போனவர்கள் மறுபடியும் உங்களைச் சந்திக்க நேரலாம். 
 
பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.
 
மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது முழுக்கவனம் படிப்பில் ஏற்படும். கலை, இசை, பரத நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தக்க சன்மானமும், புகழும் உண்டு. 
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.
 
திருவோணம்:
இந்த மாதம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.
 
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள்.
 
பரிகாரம்: அக்னி வீரபத்திரர், அகோர வீர பத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணெய் சார்த்தி வழிபடுவதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - சனி
சந்திராஷ்டம தினங்கள்: 23, ,24
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்