ஜனவரி 2022 - புத்தாண்டு பலன்கள்: துலாம்

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:44 IST)
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

 
துலா ராசி அன்பர்களே இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.
 
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
 
குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  
 
பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.
 
அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும்.
 
கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்களை கற்றுத் தெளிவீர்கள்.
 
மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். 
 
சித்திரை 3, 4:
சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.
 
சுவாதி:
புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். ராகு சஞ்சாரம் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.
 
விசாகம் 1, 2, 3:
தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். 
 
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 6
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்