தை மாத ராசி பலன்கள் 2023 – ரிஷபம்

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (12:33 IST)
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)


கிரகநிலை:
ராசியில் செவ்வாய்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, சூரியன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
15-01-2023 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
23-01-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-02-2023அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
13-02-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:
கட்டுபாடு  இல்லாமல் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். எனினும் நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். முக்கிய முடிவு எடுக்கும் போது தடுமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும்.

பெண்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல்  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 

கார்த்திகை - 2, 3, 4:
இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

ரோகினி:
இந்த மாதம் புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீரிஷம் - 1, 2:
இந்த மாதம் மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்:  துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை யில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபட கஷ்டம் நீங்கும். போட்டி, பொறாமை அகலும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜன: 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: ஜன: பிப்: 9, 10, 11

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்