டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (18:09 IST)
டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -   களத்திர ஸ்தானத்தில்   புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-Dec-19 அன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
அடுத்தவர் நலனில் அதிக அக்கறை கொண்ட  மேஷராசியினரே, இந்த மாதம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.  எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் பின் வேகம் பிடிக்கும்.  வீண்மனசஞ்சலம் தீரும்.

குடும்பத்தில் இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர் பான   அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கை யாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

அரசியல்துறையினர் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் அகலும்

பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அஸ்வினி:
இந்த மாதம் அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் நீங்கும். அரசு அலுவலகத்தில் வேலை புரிபவர்களுக்கு நல் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். தடைபட்டிருந்த தொழில் சிறப்பாக நடைபெறும். வர வேண்டிய ஆர்டர்கள் தங்கு தடையின்றி வந்து சேரும்.

பரணி:
இந்த மாதம் அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை தங்கு தடையின்றி வாங்குவீர்கள். எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும்.  கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரித்து காணப்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் ஏற்படும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.  குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும்.  கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளை நிதானமாக பேசுவதன் மூலம் அனைவரின் மனதையும் புண்படுத்தாமல் இருப்பீர்கள். கவனச் சிதறல் ஏற்பட்டு காரியத்தை கோட்டை விட்டு விடாதீர்கள். கணவன் மனைவியிடையே பூசல் வந்து போவதற்கு வாய்ப்புண்டு.

பரிகாரம்: அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று தினமும் வழிபட்டு வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்