ஏப்ரல் மாத பலன்கள்: மகரம்

Webdunia
ஞாயிறு, 31 மார்ச் 2019 (17:34 IST)
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

உணர்ச்சிகளை வெளியில் காட்டத் தெரியாத மகர ராசி அன்பர்களே இந்த மாதம் நீங்கள் முயற்சி செய்து நடத்தும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாகனங்களை ஓட்டும்போது எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு ஜாமீன் போடுவதால் வீண் பழி ஏற்படலாம். உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான  முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள்  மத்தியில்  மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில்  அக்கறை காட்டுவீர்கள்.

திருவோணம்:
இந்த மாதம் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.   எந்த ஒரு  சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

பரிகாரம்: சித்தர்கள் ஜீவ சமாதியை வழிபடுங்கள். சனிக்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு உகந்தது.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்