இந்த ராசிக்காரர்களுக்கு சுபகாரியங்கள் கை கூடும்! – இன்றைய ராசி பலன்கள்(09.08.2024)!

Prasanth Karthick
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 


மேஷம்:
இன்று படிப்படியான முன்னேற்றத்தை அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்தியளிப்பதாக அமையும். குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5

ரிஷபம்:
இன்று எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

மிதுனம்:
இன்று கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளநிலையில் நடைபெற்றாலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களும் சற்று சிறப்பான லாபத்தைப் பெறஇயலும் என்றாலும் போட்டி பொறாமைகளையும் சந்தித்தே ஆகவேண்டும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கடகம்:
இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் கௌரவமான பதவிகளை அடையமுடியும். மாணவர்களின் கல்வித்திறன் ஓரளவுக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு உயர்வுகளைப் பெறுவீர்கள். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:
இன்று கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் இக்காலத்திலும் தடைகளையே சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி:
இன்று குடும்பத்திலும் பொருளாதாரத் தட்டுப்பாட்டினாலும் வீண் சஞ்சலங்களும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறையும் என்றாலும் புத்திரவழியில் வீண் செலவுகளும் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களினாலும் வீண் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்:  5, 9

துலாம்:
இன்று உற்றார்-உறவினர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷனை சந்திப்பீர்கள். உங்களின் திறமைக்கேற்ற உயர்வுகளும் தாமதப்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க நேரிடுவதால் வேலைப்பளு அதிகரிக்கும்.
அதிர்ஷ்டநிறம்:  பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள்விலகி ஒற்றுமை பலப்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு சிறப்பான புத்திரபாக்கியம் அமையும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:  1, 6, 9

தனுசு
இன்று பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் கடன்களும் படிப்படியாகக் குறையும். புத்திரபாக்கியம் வேண்டு பவர்களுக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:  3, 5, 7

மகரம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் சரளநிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபமடையமுடியும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:  2, 6, 9

கும்பம்
இன்று தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், அபிவிருத்தியும் பெருகும். தொழிலாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் பல முன்னேற்றப்பாதைகளுக்கு வழிவகுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவற்றாலும் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்:  நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்:  2, 5

மீனம்
இன்று உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்தியான நிலையினை அடைவார்கள். தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்