இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(01.03.2024)!

Prasanth Karthick
வெள்ளி, 1 மார்ச் 2024 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று கடன்பட நேரிடும். அந்த கடனே பெரும் சிரமத்தைக் கொடுக்கும் எனவே நிதிநிலைகளில் அதிக கவனம் தேவை. பெரும் முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து அதனால் வெற்றி பெறுவீர்கள். மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வீடு, மனை விருத்தி செய்யும் திட்டங்களைத் தள்ளிவைக்க வேண்டும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக் கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

மிதுனம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து  திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். மேலிடத்தின் கனிவான பார்வையால் குதூகலம் பெறுவீர்கள். தொழில் சார்ந்த பயணங்கள் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும். பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம்  ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:
இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லமுறையில் முடியும். படித்த  பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையில் இருந்துவந்த தொந்தரவுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

சிம்மம்:
இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். வீடு மனை சார்ந்த முயற்சிகள் எடுக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து  வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். உங்கள் உழைப்புக்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கன்னி:
இன்று முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நன்மையான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில்  தாமதம் ஏற்படும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. உறவினர்கள் வருகையினால் குடும்பச் செலவுகள்  கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

துலாம்:
இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரியும் நபர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். அரசியல் துறையினர் புதிய முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை. உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பணிச்சுமை கூடியபோதும் அதிகாரிகளின் பாராட்டு  தெம்பைக் கொடுக்கும். கடிதத் தொடர்பில் நல்ல தகவல்கள் வந்துசேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்:
இன்று ரகசியங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு கடன் தொல்லைகள் நீங்கும். சொத்துப் பிரச்சினையும் தீரும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து பெற்றோரின் பாராட்டைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு:
இன்று எதிலும் அதிக சிரத்தை எடுப்பது நன்மை தரும். மன அமைதி உண்டாகும். காலம் தவறாத பேச்சினால் அனைவரிடமும் நற்பெயர் வாங்குவீர்கள். இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக வாகனங்களைக் கையாள வேண்டும். வேகத்தை விவேகத்துடன்  செயல்படுத்தினால் விபத்தைத் தடுக்கலாம். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் குறைவு வராது. உத்யோகஸ்தர்கள் கேட்ட மாறுதலை அடையலாம். மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மகரம்:
இன்று பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.  தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். பெற்றோர் பிள்ளைகளுக்காகத் தேடும் வரன்கள் நல்லபடியாக அமையும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி புதிய தொழில் தொடங்குவதோடு, புதிய ஒப்பந்தத்தையும் பெறுவார்கள். வியாபாரிகளின் லாபத்துக்குக் குறைவு வராது. சிலர் வீடு மாற்றம் செய்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள் இருக்கும். இளைஞர்கள் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மீனம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  பெண்கள் உணவுப்பழக்கத்தில் எச்சரிக்கையாக இருந்தால் பின்னடைவைத் தவிர்க்கலாம். பிள்ளைகளின் படிப்பில் இருந்த மந்தநிலை மாறும். நீண்ட நாட்களாக வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்