இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-06-2021)!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர்  புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை  உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மிதுனம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:
இன்று உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.  காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்:
இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை  சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

கன்னி:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி  வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி  கிடைக்கலாம்.  சிலருக்கு கூடுதல் பொறுப்புகள்  வந்த சேரும். வருமானம் கூடும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன்  சுமுகமாக பேசி பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

துலாம்:
இன்று குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக  பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே  நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம்:
இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

தனுசு:
இன்று குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள்  வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்:
இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும்.  மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள்  நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:
இன்று விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனகசப்பு மாறும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்