இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (21-04-2021)!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று அதிர்ஷ்டத்தால் வீடு, மனை வாங்கவும், அபிவிருத்தி செய்யவும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் பெறவும், ஆயுள் விருத்தி அடையவும் கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உதவிகேட்டு உங்களிடம் வருவர். தகுதிக்கு உட்பட்டு உதவி புரிந்தால் துன்பம் இல்லை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:
இன்று இயந்திரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலில் அபிவிருத்தி பெறுவர். ஆதாயமும் விரயமும் அடுத்தடுத்து வரும். தெய்வ வழிபாட்டால் விரய செலவுகளை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்:
இன்று புதிய உற்சாகத்துடன் அரசுப்பணி ஊழியர்கள் ஈடுபடுவார்கள். தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு கீழ் உள்ள ஊழியர்களிடம் கடுமையான கண்டிப்பு காட்டினால் நிர்வாக உயர்வுக்கு வசதியாக இருக்கும். இந்நேரத்தில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கடகம்:
இன்று தொழில் சார்ந்த வார்த்தைகள் மட்டுமேயன்ரி, ஊழியர்களின் சொந்த பிரச்சனைகள் தொடர்பாக பேசுவதை தவிர்க்க வேண்டும். தைரியமான சிந்தனை மனதில் உருவாகும். உங்கள் செயல்பாடுகளால் வருமானம் அதிகரிக்கும். நிர்வாகத்தின் சார்பில் வெளியிடங்களுக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:
இன்று ஆடம்பர பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஊழியர்களுக்கு சற்று கூடுதலான செலவாகும். உணவு பழக்க வழக்கங்களில் வரைமுறை தேவை. இல்லாவிட்டால் தேவையற்ற சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி:
இன்று ஆட்டொமொபைல் தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருள் உற்பத்தி செய்பவர்களும் தங்கள் தொழிலில்  முன்னேற்றம் காண்பர். நல்ல லாபம் அடைவார்கள். தொழிலில் புதுமைகளைச் செய்து மிகுந்த வரவேற்பு பெறுவார்கள். மனம் உற்சாகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:
இன்று கடுமையாக பேசும் வார்த்தைகளால் சில சிரமங்கள் உண்டாகலாம். தைரியமான எண்ணங்கள் மனதில் உருவாகி நல்வழிப்படுத்தும். நண்பர்களால் புதிய படிப்பினை கிட்டும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் எதிரிகளால் வரும் இடையூறுகள் திசைமாரி சென்றுவிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். சுபச்செலவுகள் அதிகம் என்றாலும் மன நிறைவுக்கு குறைவில்லை. குறைந்த மூலதனத்தில் இதுவரை வியாபாரம் செய்து வந்தவர்கள் கூடுதல் முதலீடி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். இதன்மூலம் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் துவங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு:
இன்று நண்பர்களும், உறவினர்களும் பல்வேறு உதவிகள் செய்ய இருப்பதால் வியாபாரம் செழிப்படையும். உங்களிடம் கடன் பெற்றவர்கள் தானாகவே முன்வந்து பணத்தை திருப்பித்தந்துவிடுவார்கள். சகோதர வகையில் பெண்களால் அதிக உதவி கிட்டும். குலதெய்வ வழிபாடு செய்வது லாபத்தை கூடுதலாக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மகரம்:
இன்று எதிரிகளால் இருந்த நிர்பந்தங்கள் மாறி மனதில் அமைதி குடிகொள்ளும். ஓட்டல் நடத்துவோர், குத்தகை வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடித்தால் மனம் நிம்மதியாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:
இன்று நண்பர்களுடன் வீண் வார்த்தைகள் பேசுவதால் வார்த்தைகள் கடினமாகி மனக்கசப்பு ஏற்படும் சூழ்நிலை வரலாம். தைரியமான சிந்தனைகளும், அதனை செயல்படுத்தும் வாய்ப்புகலும் உருவாகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன், அவர்களால் உதவியும் நிறையவே கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:
இன்று உங்களது நியாயமான தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான சில தீய நட்புகள் உங்களுக்கு ஏற்படலாம். எனவே கவனமுடன் இருக்கவும். மிகவும் நிதானத்துடன் குடும்பத்தை நிர்வகிக்கும் புதிய சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்