ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தா? பொறுமையை இழந்த தேர்தல் கமிஷன்

வியாழன், 6 ஏப்ரல் 2017 (04:52 IST)
தமிழக வரலாற்றில் முதன்முதலாக திருமங்கலம் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா முறை ஆரம்பமானது. இந்த நடைமுறை தற்போது தலைவிரித்தாடி ஒரு தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் ரூ.120 கோடி செலவு செய்யும் அளவிற்கு அரக்கனாகி உள்ளது.

 


 
 

தேர்தல் கமிஷன் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பணப்பட்டுவாடாவை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்த போதிலும் பணப்பட்டுவாடாவில் எந்த தொய்வும் இன்றி அசுர பலத்துடன் நடந்து வருகிறது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாகி வருவதால் தேர்தல் கமிஷன் பொறுமையை இழந்துவிட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து குறித்த செய்திகள் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்