விவேக்கை குறிவைத்து நடந்த ரெய்ட்? முதல் முறையாக நிருபர்கள் முன் தோன்றி விளக்கம்!!

செவ்வாய், 14 நவம்பர் 2017 (21:05 IST)
கடந்த 5 ஆம் தேதி சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 190 இடங்களில் வருமான வரித்துறை சோதனையை ஆரம்பித்தது.


 
 
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி சிஇஓ விவேக்கின் இல்லம், அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா இல்லம், அண்ணா நகரிலுள்ள விவேக் மாமனார் பாஸ்கரன் வீடு என விவேக்கை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது.
 
ஐந்து நாட்களாக நீடித்து வந்த சோதனை நேற்று நிரைவடைந்தது. விசாரணைக்காக நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விவேக் அழைத்து செல்லப்பட்டார்.
 
இந்நிலையில், விவேக் முதல் முறையாக ஊடகங்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறேன். 
 
என்னுடைய வீட்டில் ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கணக்கு வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பினர். திருமணத்தின் போது என்னுடைய மனைவிக்கு போடப்பட்ட நகைகள் குறித்து கேட்டனர். 
 
வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது கடைமையை செய்தார்கள், வருமான வரி கட்ட வேண்டியது எனது கடமை, அதனை நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். 
 
இது சாதாரண சோதனைதான். வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள், அப்போதும் தகுந்த ஒத்துழைப்பு தருவேன் என்று பேட்டியளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்