வைகோதான் அடுத்த முதலமைச்சர்?

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (16:01 IST)
சசிகலா மற்றும் நடராஜன் ஆகியோர் மீது வழக்கு உள்ளதால் வைகோவை அடுத்த முதலமைச்சராக நியமிக்க சேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


 

 
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழகத்துக்கு தற்காலிக முதல்வர், ஆளுனர் ஆட்சி ஆகிய ஏற்பாடு செய்ய வேண்டும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
ஆனால் அதிமுக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அதற்கு அவசியமில்லை முதல்வர் நல்ல உடல்நிலையுடன் தான் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.
 
இன்னொரு பக்கம் சசிகலா துணை முதலமைச்சர் பதவி வகிக்கப்போவதாகவும், நடராஜன் அதிமுக கட்சியை கைப்பற்றபோவதாகவும் செய்திகள் இணையதளங்களில் பரவி வருகிறது.
 
இந்நிலையில் வைகோவை அடுத்த முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வதந்தி பரவி வருகிறது. சசிகலா மற்றும் நடராஜன் மீது வழக்கு உள்ளதாலும், முதலமைச்சருக்கான அனைத்து தகுதிகளும் வைகோவிடம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
 
மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நலம் குறித்த செய்தி மற்றும் கட்சி தொடர்பான செய்திகள் ஆகியவை அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளாகவே பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்