தேமுதிக தலைவர் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா ஆகியோருக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 6ஆம் தேதி, பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக அவதூறாக பேசியதாக, தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஆனால், அந்த வழக்கில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் 4 முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவர்கள் இருவருக்கும், திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அலமேலு, பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தேமுதிக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.