நேற்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து இன்று காலை முதல் ஆளுனர் வித்யாசாகர் ராவை அடுத்தடுத்து அரசியல் பிரபலங்கள் சந்தித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்குமாறு ஆளுனரை திருச்சி சிவா தலைமையிலான திமுக எம்.பிக்கள், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என்று ஆளுனரை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
அனைவரையும் சந்தித்த பின்னர் ஆளுனரின் முடிவு என்னவாக இருக்கும், ஏதாவது திருப்பம் ஏற்படுமா? என்று தமிழக மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.