பாஜகவின் 355,356 திட்டம்! ஆட்சி கலைக்கப்படுகிறதா?

Webdunia
புதன், 10 மே 2017 (05:30 IST)
அதிமுகவின் இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரபூர்வமாக தொடங்கவில்லை எனினும் கடந்த 15 நாட்களாக மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஓபிஎஸ்க்கு முதல்வர் பதவி, செம்மலை, பாண்டியராஜன், சண்முகநாதன் ஆகியோருக்கு தமிழக அமைச்சரவையில் இடம் ஆகிய கோரிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஏற்கவில்லை என்பதே முக்கிய காரணம்



 


மேலும் எடப்பாடியாரின் அணி, தினகரனுக்கு மட்டுமே எதிரியாம். சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்கும் ஐடியாவே இல்லை என்று கூறிவிட்டதாம்

இந்த நிலையில் இரு அணியினர்களின் மோதல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து வரும் பாஜக, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 355வது பிரிவை பயன்படுத்தி சட்டமன்றத்தை முடக்கவும், பின்னர் ஆறுமாதங்கள் கழித்து 356வது பிரிவை பயன்படுத்தி சட்டமன்றத்தை கலைக்கவும் முடிவு செய்துள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதும் உறுதி என்றும், அதுவரை உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலும் கேள்விக்குறியே என்றும் பாஜக தலைமை அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்த கட்டுரையில்