விஜயபாஸ்கரை அடுத்து முதல்வர் உள்பட 29 அமைச்சர்களுக்கு குறி: விரைவில் கவிழ்கிறதா ஆட்சி?

செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (05:32 IST)
தமிழக அரசு இதுவரை இல்லாத வகையில் வருமான வரித்துறையினர்களின் ரெய்டு காரணமாக கவிழ வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் தொடங்கி விஜயபாஸ்கர், சரத்குமார் வரை ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்களை குறிவைத்திருக்கும் வருமான வரித்துறை அலுவலகம் ஏராளமான ஆதாரங்களை திரட்டியுள்ளது.

மேலும் தமிழக முதலமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்பட 29 பேர் ரெய்டு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனுக்குள்ளும் விரைவில் வருமானவரித் துறை, மத்திய போலீஸ் பாதுகாப்புப் படையோடு நுழையப்போவதாகவும், தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் வீடுகளும் இந்த குறியில் தப்பாது என்றும் வருமான வரித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.

முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடத்தினால் கண்டிப்பாக ஆட்சி கவிழும் என்றும், அனேகமாக அடுத்து தமிழகத்தில் பொதுத்தேர்தல் தான் என்றும் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்