இந்நிலையில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கட்சி பிரமுகர்கள் மறந்த நிலையில் அவருக்காக, அவர் பெயரில் தனிக்கட்சியை துவக்க ஒரு மாஜி முன்வந்துள்ளார். மேலும் முழுக்க, முழுக்க ஜெயலலிதாவின் செயல்திட்டங்களை கொண்டே கட்சி இருக்குமென்றும், அதேபோல, டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழை போல, டாக்டர் நமது புரட்சித்தலைவி என்ற நாளிதழையும் துவக்க அரவகுறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும் ஜெ.வின் பெயரில் தனியாக ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. காரணம் என்னவென்றால், இவர் மாஜி என்பதால், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும், செந்தில் பாலாஜியை, அழைக்கப்பதில்லையாம். அதேபோல், ஜெ.வே மீண்டும் சேர்த்தால் கூடா நான் சேர்க்க மாட்டேன் என்று துணை சபாநாயகர் தம்பித்துரையும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கை கோர்த்துள்ளதாகவும் தெரிகின்றது.
இந்நிலையில் அமைச்சர் மற்றும் முதல்வர் பதவிக்காக அம்மாவின் கொள்கைகளை மறந்து விட்டு அ.தி.மு.க நிர்வாகிகள் மணிக்கு ஒரு முறை அணி தாவுவதால், ஜெயலலிதா கண்ட லட்சியத்தை தனிக்கட்சி மூலமாகவே நம்மால் நிறைவேற்ற முடியும் என விஜயபாஸ்கர் நம்புவதாக ரகசிய தகவலும் தற்போது வெளி வந்துள்ளது.