அமித்ஷாவை கலாய்க்கும் சீமான்: கதவ மூடுங்க வேற யாரவது வந்துட போறங்க!

Webdunia
புதன், 24 மே 2017 (11:03 IST)
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் சேர்வதற்காக பாஜகவின் கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது இந்த கருத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலாய்த்துள்ளார்.


 
 
9 வருடங்களுக்கு பின்னர் தனது ரசிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ரசியல் குறித்து நிறைய பேசினார். கிட்டத்தட்ட தான் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகவே இதனை செய்தார். இதனையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவும், எதிர்ப்பும் நிறைந்த கருத்துக்கள் உலா வந்தது.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் பாஜகவின் கதவுகள் ரஜினிக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது என்றார்.
 
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்களில் முக்கியமானவரான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு நக்கலாக பதில் அளித்துள்ளார். ரஜினிக்காக கதவை ரொம்ப நேரம் திறந்த வைக்காதீங்க அப்புறம் வேற யாரவது வந்துட போராங்க என கலாய்த்தார்.
அடுத்த கட்டுரையில்