தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், அவரின் நீண்ட நாள் தோழி சசிகலா நடராஜன், அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்த வேண்டும் என ஏராளமான அதிமுகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தினமும் ஏராளமானோர் ஜெ. வசித்து வந்த போயஸ் தோட்டம் சென்று சசிகாலை நேரில் சந்தித்து, தலைமை பொறுப்பை ஏற்குமாறு அவரிடம் வற்புறுத்தி வருகின்றனர்.
அப்படி வந்தவர்களை சசிகலா சந்தித்து உரையாடும் சில புகைப்படங்களை அதிமுக டிவிட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. அதில் “சின்னம்மா அவர்களை சந்தித்து மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவர்களுடன் உட்கார்ந்து நலம் விசாரித்தார் சின்னம்மா அவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களோடு கீழே அமர்ந்து அவர்களோடு சசிகலா உரையாடுவதை பார்க்கும் போது, அவர் ஜெயலலிதாவை மிஞ்சி விட்டார் எனவும், அரசியலில் நுழைய தன்னை தயார்படுத்தி வருகிறார் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.