ஓபிஎஸ் மகன் மீது கொலை வழக்கு: முன் ஜாமீன் கிடைக்குமா?

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (22:20 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன இந்த நிலையில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அந்த பிரச்சனை கைகலப்பில் முடிந்தது.




 

இந்த சண்டையில்  தினகரன் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்ய முயன்றதாகக் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் அவரது சகோதர் ஓ.ராஜா மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது முழுக்க முழுக்க பொய்வழக்கு என்றும், இந்த பொய் வழக்கில் தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி, ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் முன்ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு மீது வரும் திங்கள் அன்று விசாரணை நடைபெற உள்ளது.
அடுத்த கட்டுரையில்