வெளியேறிய எம்.எல்.ஏ-வை தேடி தூக்கி வந்த கட்சி தலைமை!!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (15:42 IST)
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் தரப்பில் அறிவிக்க பட்டிருந்ததையடுத்து 10 மணிக்கு முன்பே எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் காத்திருந்தனர்.


 
 
சசிகலா கூட்டத்திற்கு வர மணி 11.30 ஆகிவிட்டது. காலையில் இருந்து வெறும் வயிற்றில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்களில் பலர் சோர்வாக காணப்பட்டனர். அப்போது, கூட்டத்தின் பாதியிலேயே படப்படப்பு காரணமாக மணப்பாறை எம்.எல்.ஏ சந்திரசேகர், கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினார். 
 
சில நிமிடம் கழித்து உள்ளே எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் ஒருவர் குறைந்திருப்பதைக் கண்டுபிடித்தது கட்சித் தலைமை.  பதிவேடு, மொபைல் எண்கள் ஆகியவற்றை வைத்து வெளியேறியது சந்திரசேகர்தான் எனக் கண்டுபிடித்துத் தேட ஆரம்பித்தனர். 
 
அரை மணி நேரம் கழித்து, அலுவலகத்தின் வெளியே டீக்கடை ஒன்றின் ஓரமாய் இளைப்பாறிக்கொண்டிருந்த சந்திரசேகரைக் கண்டுபிடித்து, உள்ளே தூக்கி வந்துள்ளனர். 
 
பின்னர், காலையில் இருந்து வயிறு காலியாக இருக்கிறது. எனக்குப் படபடப்பாகிவிட்டது. அதனால் தான் வெளியே வந்தேன் என சொல்லியிருக்கிறார் எம்.எல்.ஏ சந்திரசேகர்.
அடுத்த கட்டுரையில்