சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்விக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்தே தேர்தல் கமிஷன் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது. ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டார்கள். பல புகார்கள் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். பல தொகுதிகளில் அமைச்சர்கள் பலர் தொகுதியில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்டனர். பல தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் வந்தன. அப்படி இருக்க அவர்கள் எப்படி வெற்றிபெற முடியும்.
திருப்பூரில் கண்டெய்னரில் 570 கோடி ரூபாய் பிடிப்பட்டது. அதை வங்கி பணம் என்று மத்திய அரசு அறிவிக்க காரணம் என்ன? . இவ்வளவு பிரசனைகளை மீறி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.
மேலும், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே திமுக தோல்வி அடைந்துள்ளது. ஆளும் கட்சியின் பணபலம், ஆளும் கட்சிக்கு ஆதரவான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் திமுகவை தோல்விக்கு காரணம் என்று கூறினார்.