கல்வி கட்டணம் இனிமேல் ஆன்லைனில் மட்டும்தான்: ஆனால் அடங்குதா கல்வி நிறுவனங்கள்?

வியாழன், 8 ஜூன் 2017 (06:00 IST)
பள்ளி, கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை அதிக கட்டணங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்று, பெற்றோர்களை கொள்ளையடிப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து புகார் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு இதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்க இனிமேல் கல்வி கட்டணத்தை பணமாக வாங்கக் கூடாது என்றும் ஆன்லைனில் மட்டுமே கட்ட வேண்டும் என்றும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.



 


ஆனால் இதற்கெல்லாம் அசறுமா இந்த கல்வி நிறுவனங்கள். நடிகர்கள் சம்பளம் வாங்கும்போது வெள்ளையில் கொஞ்சம், கருப்பில் கொஞ்சம் வாங்குவதை போல, கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் அரசு நிர்ணயித்த கட்டணம், பின்னர் கருப்பில் தங்களுக்கு வேண்டிய கட்டணம் என இரு பிரிவுகளாக பிரித்து வாங்கி வருவதாக தெரிகிறது

அரசு எந்த சட்டம் போட்டாலும், அதை முறியடிக்க முறைகேட்டாளர்கள் இருக்கும் வரை இந்தியாவில் குற்றங்களை தடுக்க முடியாது என்பதையே இது காட்டுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்