வரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 190 இடங்களிலும் ஜெயா டிவிக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, பெங்களூரு, கொடநாடு, கூடலூர் உள்ளிட்ட இடங்களிலும் சசிகலா மற்றும் தினகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.