மு.க.ஸ்டாலின் உட்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (15:34 IST)
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அனுமதியின்று கூடியதாக, திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுவினர் 60 பேர் மீது, காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த 17ஆம் தேதி, தமிழக சட்டசபையில், தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டதால், திமுக உறுப்பினர்களை குண்டு கட்டாக வெளியேற்றியதோடு, சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
 
அதைத் தொடர்ந்து, 18ஆம் தேதி சட்டசபை வாளகத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாதிரி சட்டசபை கூட்டத்தையும் அவர்கள் நடத்தினர். அதில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உட்பட ஏராளமான திமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
 
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடியதாக, தமிழக சட்டசபை எதிர்கட்சித்தலைவரும், திமுக பொருளாளாளருமான ஸ்டாலின் உட்பட 60 பேர் மீது, சென்னை கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்