தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா: தம்பித்துரை பேச்சால் சர்ச்சை

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (13:32 IST)
கரூரில் எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. 


 

 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரையும் சிறப்புரையாற்றினார்கள். 
 
இந்நிகழ்ச்சியில் தற்போது புதிய வாக்காளர்களை அ.தி.மு.க வில் இணைத்து உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தினார்கள். அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புரையை தொடர்ந்து, மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கழக கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் மு.தம்பித்துரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
 
அவர் பேசும்போது “இந்த நாட்டு மக்கள் ஏமாளி அல்ல, கருணாநிதியின் பொய்பிரச்சாரத்தை கேட்டு அதற்காக வாக்களிக்க மாட்டார்கள். மீண்டும் புரட்சித்தலைவி அம்மாதான் முதலமைச்சர்.  தமிழ், தமிழ் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருப்பவர் புரட்சித்தலைவி அம்மாதான்” என்றார்.  அதாவது கருணாநிதி என்று கூறுவதற்கு பதிலாக ஜெயலலிதா என்று கூறிவிட்டார்.
 
இதனைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் சுதாரித்து, இல்ல அது கருணாநிதி என்றார். இதனை தொடர்ந்து புரட்சித்தலைவருக்கு தொல்லைகளை கொடுத்தவர், புரட்சித்தலைவி அம்மாவிற்கு பல வழக்குகளை கொடுத்த தீய சக்தி தான் கருணாநிதி என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க கட்சியில் அதிக மொழிகளை படிக்க தெரிந்தவர். 
 
மேலும் அ.தி.மு.க கட்சியில் அதிகம் படித்தவர், பேச்சுத்திறமை, எழுத்து திறமை, பாரத பிரதமர் மோடியிடமே நேருக்கு நேர் பேசும் திறமை படைத்த இவரின் பேச்சு தற்போது அ.தி.மு.க வினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே எம்.ஜி.ஆரை பற்றி அவதூறாக பேசினால் மட்டுமே கோபப்படும் அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் தம்பித்துரை, ஜெயலலிதாவை பற்றி பேசினால் விட்டு விடுவார் என்று கட்சி பிரமுகர்களிடையே செய்தி வெளியானதை தொடர்ந்து இந்த சர்ச்சைக்குரிய பேச்சு, அ.தி.மு.க வினர் மத்தியில் சாயம் வெளுத்தது போல் உள்ளதாக தெரிகின்றது. 

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்
அடுத்த கட்டுரையில்