அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக அதிமுக தலைமை பொறுப்பை வி.கே.சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், சசிகலா, வருகிற ஜனவரி 2ம் தேதி திமுக பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை எனவே, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பி துரை, பொள்ளாச்சி ஜெயராமன், ராஜலட்சுமி ஆகியோர் தற்போது போயஸ் கார்டன் சென்றுள்ளனர். அவரை நேரில் சந்தித்து, பொதுக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு சசிகலாவை வலியுறுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.