பிப்ரவரியில் தேயிலை உற்பத்தி 7% சரிவு

வியாழன், 7 ஏப்ரல் 2011 (17:07 IST)
மேற்கு வங்கம், வட, இந்திய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி குறைந்ததன் காரணமாக பிப்ரவரி மாதத்தில் 7% உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளதென தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேயிலை உற்பத்தி 1.897 கோடி டன்னாக இருந்தது. அது இந்த ஆண்டு பிப்ரவரியில் 1.673 கோடி டன்னாக குறைந்துள்ளதென தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

ஆயினும் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 44,000 கி.கி. ஆக இருந்த தேயிலை உற்பத்தி, இந்த ஆண்டு பிப்ரவரியில் 94,000 கி.கி. ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்