யூரியா விலைக் கட்டுப்பாடு நீக்கப்படலாம்: உரத் துறை செயலர்
திங்கள், 29 நவம்பர் 2010 (19:57 IST)
யூரியா மீதான விலைக் கட்டுபாடும், அதன் இறக்குமதி மீதான மத்திய அரசின் கட்டுப்பாடும் அடுத்த நிதியாண்டில் நீக்கப்படலாம் என்று மத்திய உரத் துறை செயலர் சுட்டானு பெஹூரியா கூறியுள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெஹூரியா, யூரியா விலையை விவசாயிகள் வாங்கும் அளவிற்கு மட்டுமே உயர்த்த அனுமதிக்கும் ஒரு மேம்போக்கான கட்டுப்பாட்டை மட்டும் சந்தையின் மீது செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
வரும் மார்ச் மாதத்துடன் முடியும் நிதியாண்டிற்குள் யூரியாவுக்கு வழங்கவேண்டிய மானியத்திற்காக மேலும் ரூ.8,000 முதல் 10,000 வரை நிதியமைச்சகத்திடம் கேட்டுள்ளதாகவும் பெஹூரியா கூறியுள்ளார்.
“யூரியா மீதான விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்வது பற்றி ஆலோசித்து வருகிறோம். வணிகர்களுடன் ஒரு மேம்போக்கான புரியதை மட்டுமே வைத்துக் கொள்ள அரசு விரும்புகிறது. அது விவசாயிகள் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதாக அந்த புரிதல் இருக்கும்” என்று பெஹூரியா கூறியுள்ளார்.