தற்போதைய வானிலை கணிப்பின்படி மார்ச் 28 முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது. பகலில் வெயிலின் தாக்கமும் காணப்படுகிறது.
இந்நிலையில், மார்ச் 26ஆம் தேதி வானிலை கணிப்பின்பிட இராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி, காவிரி டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, புதுச்சேரி, கடலூர் உட்பட கடலோர மாவட்டங்களிலும் அரியலூர், திருச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் மார்ச் 28ஆம் தேதி முதல் 30 வரை மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.