அரும்பாவூரில் 160 மி.மீ. மழை!

வெள்ளி, 29 அக்டோபர் 2010 (14:31 IST)
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் நேற்று ஒரே நாளில் 160 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதி என்றறியப்பட்ட அரும்பாவூரில் ஒரே நாளில் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று கூறுகின்றனர்.

அங்குள்ள குளங்கள் அனைத்தும் இந்த ஒரு நாளில் மழையில் நிரம்பிவிட்டதில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்