ரெய்டுக்கு காரணம் நமது எம்ஜிஆர் நாளிதழா?

புதன், 15 நவம்பர் 2017 (05:26 IST)
சசிகலா குடும்பத்தினர் மீதான ரெய்டுக்கு அரசியல் காரணம் உள்பட எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணம் நமது எம்ஜிஆர் நாளிதழ்தான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


 


இந்த நாளிதழில் சோ.க.’, ‘ராக்கெட் ராமசாமி’, ‘சோழ அமுதன் ஆகிய பெயர்களில் வெளியான கட்டுரைகள் மத்திய அரசையும், உபி அரசையும் கடுமையாக தாக்கி எழுதப்பட்டிருந்ததாம். குறிப்பாக மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது

நாளிதழ், டிவி, பணம், ஆகியவற்றை வைத்து கொண்டுதான் இந்த ஆட்டம் போடுவதாக நினைத்த மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, மூன்றையும் முடக்கும் நோக்கத்தில்தான் இந்த ரெய்டு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் மட்டுமின்றி சசிகலா குடும்பத்தில் இனிமேல் யாருமே அரசியல்ரீதியாக எழுந்து வரக்கூடாது என்ற நோக்கத்திலும் ரெய்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்