தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 65வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால், தேமுதிக அலுவலகம் களை கட்டியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்ட விஜயகாந்த், பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, விடுதலை சிறுத்தை திருமாவளவன் மற்றும் முத்தரசன் ஆகியோர் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். வைகோ விஜயகாந்திற்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது “விஜயகாந்த் நல்ல உடல் நலத்தோடு 100 வருடங்கள் வாழ்ந்து அவர் ஏழைகளுக்கு தொண்டு செய்யவேண்டும். மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்தின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்று தெரியாது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் நான்கு கட்சிகளின் கூட்டணி தொடரும்” என்று கூறினர்.
சட்டமன்ற தேர்தலில் சந்தித்த தோல்விக்கு பின், விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் தொடர்கிறாரா இல்லையா என்று தெரியாத சூழ்நிலையில், இந்த சம்பவம் தமிழக அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.