அப்துல்கலாமையும் காவியாக மாற்றிவிட்டீர்களே ! சீமான் குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (06:01 IST)
முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்களுக்கு அவர் பிறந்த ஊரான பேய்க்கரும்பில் சமீபத்தில் மணிமண்டபம் திறக்கப்பட்டது. பாரத பிரதமர் மோடி திறது வைத்த இந்த மணிமண்டபத்தை பொதுமக்கள் அனைவருமே பார்த்து திருப்தி அடைந்தனர்.



 
 
ஒருசில லட்டர்பேட் அரசியல்வாதிகள் மட்டுமே அப்துல்கலாம் சிலை காவி கலரில் இருப்பதாகவும், அவருடைய சிலை அருகே பகவத் கீதை  இருப்பதாகவும் ஒரு மதத்தின் வெளிப்பாடாக இருப்பதாகவும், விளம்பரத்திற்காக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இதுகுறித்து கூறியபோது, ' எல்லா மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அப்துல் கலாம் நினைவிடத்தில் எல்லா மத நூல்களையும் வைத்திருக்கலாம். காவி நிறத்தில் கலாம் சிலை அமைத்துள்ளதற்கு தமிழக அரசு தான் காரணம்' என்று கூறினார். இந்த நிலையில் அப்துல்கலாம் சிலை அருகே பைபிள் மற்றும் குர்ரான் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்