அதிருப்தியில் உள்ள கரூர் மாவட்ட பாஜகவினர் அதிமுகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை தற்போது ஆள்வது பாரதீய ஜனதா கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஒரு பெண்மணியாக இருந்தாலும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் முன் நிற்பதோடு, ஆங்காங்கே களப்பணியில் ஈடுபடுவதோடு, தமிழகத்தில் ஆண்ட, மற்றும் ஆளுகின்ற திராவிட கட்சிகளுக்கு ஒரு சவால் விட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவரின் கீழ் வரும் தமிழகத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டவர்களில் தற்போது பெருமளவு விரக்தியில் தள்ளப்பட்டுள்ளவர் கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் நீ.முருகானந்தம்.
இலாலாபேட்டை பகுதியை சார்ந்த இவர், இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் தன் ஏற்பாட்டில் நடத்தியது. இல்லை. இளைஞரணி சார்பில் எதாவது நிகழ்ச்சி நடைபெற்றால் போட்டாவிற்கு போஸ் கொடுப்பது மட்டும் இவரது வேலையாக இருந்தது. தமிழக அளவில், ஏன் இந்திய அளவில் நீர் நிலைகளிலும், காற்று மற்றும் அனைத்து விதமான நிலங்களிலும் தூய்மை என்பது குறைந்த அளவு கூட கரூர் மாவட்டத்தில் இல்லை.
காரணம், எல்லாவற்றிலும் அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகம், இதற்கு துணை போவதோடு, கண்டு கொள்ளாமல் மோடியின் லட்சியக்கனவில் பங்கம் விளைவிக்கும் வகையில் கரூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகம் செயல்பட்டு உள்ளது.
குறிப்பாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொளந்தரராஜன் எதாவது ஒரு அறிக்கை விட்டால் ஒரு நிகழ்ச்சி கூட கரூர் மாவட்டத்தில் நடப்பது இல்லை. உதாரணத்திற்கு கடந்த சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றத்துடன், பாரதமாதா வணக்க நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்திருந்தும், கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் எந்த வித நிகழ்ச்சியும் நடக்க வில்லை.
மேலும் அக்கட்சியின் பேரண்பாடி என்று சொல்லப்படும் எந்த வித பிரதான நிகழ்ச்சிகளையும் கரூர் மாவட்ட பா.ஜ.க ஈடுபட வில்லை, செய்யவும் இல்லை. காரணம் மாவட்ட பா.ஜ.க தலைவரின் அதிருப்தியாலும், அவர் அக்கட்சியின் மேல் வைத்திருந்த வெறுப்பு காரணம் என்று கூறப்படுகின்றது.
மேலும் அக்கட்சியின் பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வேலையில் கரூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகமோ, எந்த வித நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை. மற்ற மாவட்டங்களில் பிரதமருக்கு இ-போஸ்ட் அனுப்பி பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார்கள்.
ஆனால் கரூர் மாவட்டத்தில் இளைஞரணியை முன்னிலைபடுத்தி நிகழ்ச்சி ஒன்று நடத்தினால், நீ.முருகானந்தம் அந்நிகழ்ச்சிக்கு போட்டாவிற்கு போஸ் கொடுத்து விட்டு மட்டுமே செல்கின்றார் என்று பா.ஜ.க நிர்வாகிகள் கடும் கோபத்தில் இருப்பதோடு, வரும் உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்ட பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படியே இளைஞரணி பின்னாடியே சென்றால் கட்சியின் பேரண்பாடி என்ன நிலைபாடு என்பதும், உள்ளாட்சி தேர்தலையடுத்து எந்த பணியையும் ஆரம்பிக்காத நிலையில் இப்படி இருந்தால் பா.ஜ.க வின் நிலை, கரூர் மாவட்ட அளவில் கேள்விக்குறியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கரூர் மாவட்ட பா.ஜ.க வை காப்பாற்றும் விதத்தில் யார் வந்தாலும் ஏன், அக்கட்சியை காக்க மோடியே வந்தாலும், அமித் மிஸ்ரா வே வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று இளைஞரணி மாநில நிர்வாகி கோபிநாத் சவால் விடுக்கின்றார்.
கவலைக்கிடமான கரூர் மாவட்ட பா.ஜ.க வை காக்க அக்கா தமிழிசை எந்த நடவடிக்கை எடுக்க உள்ளார் என்பது அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஏக்கமாக உள்ளது.