“ஓ.பி.எஸ்-ஐ திமுக ஆதரிக்கும்”: திமுக துணைப் பொதுச் செயலாளர் அதிரடி

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2017 (23:53 IST)
திமுக உறுதியாக ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிக்கும் என திமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்து உள்ளார்.


 

செவ்வாய்கிழமை இரவு ஜெயலலிதா சமாதியில் சுமார் 40 நிமிடங்கள் மவுன விரதம் இருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னைக் கட்டாயப்படுத்திதான் முதலமைச்சர் பதவியில் ராஜினாமா செய்ய வைத்தனர் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவிற்கும், அறிவிப்பிற்கும் காரணம் திமுகவின் சதி என்று சசிகலா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், தங்கள் பலத்தை நிரூபிப்போம் என ஓ.பி.எஸ் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு களத்தில் குதித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனியாக கவர்னரை சந்தித்துப் பேசியுள்ளனர். அதேபோல், சசிகலா தரப்பும் ஆளுனரை சந்தித்து பேசியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பாதிலளித்த திமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக உறுதியாக ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்