2.5 கோடி ரூபாய் மதிப்பிலான காரைக் கொளுத்திய நபர் – அதிர்ச்சி வீடியோ!

புதன், 28 அக்டோபர் 2020 (16:33 IST)
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல யுடியுபர் ஒருவர் தனது புதிய மெர்சிடஸ் பென்ஸ் காரை எரித்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த மிகைல் லிட்வின் என்ற நபர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த சேனலுக்கு 49 லட்சம் பேர் சப்ஸ்க்ரைபர்களாக உள்ளனர். இதையடுத்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது புதிய மெர்சிடஸ் பென்ஸ் காரை கொளுத்தி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

மெர்சிடஸ் நிறுவனத்தில் இருந்து வாங்கிய காரில் சில கோளாறுகள் இருப்பதாக அவர் சர்வீஸுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களோ அதைக் கண்டுகொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். தனது எதிர்ப்பை தெரிவிக்க நினைத்த அவர், இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் ஏராளமான வியூஸை குவித்துள்ளது. ஆனால் சேனலை பிரபலப்படுத்தவே மிகைல் இதுபோல செய்ததாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்