மிஷன் ககன்யான் தாமதமாகலாம் - இஸ்ரோ சிவன் !!

புதன், 14 அக்டோபர் 2020 (08:08 IST)
தற்போது இஸ்ரோ தலைவர் சிவன் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு முதன்முறையாக அனுப்பும் ககன்யான் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியது. 2022 ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ள இந்த திட்டத்திற்கு இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியதால் விண்வெளி பயிற்சிகள் நிறுத்தி  வைக்கப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் வேகமெடுத்ன.
 
இந்நிலையில் தற்போது இஸ்ரோ தலைவர் சிவன் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என தெரிவித்துள்ளார். ஆம், கொரோனா தொற்று காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளது. இதனால் குறித்த காலத்திற்குள் இத்திட்டத்தை செயல்படுத்த இயலாத நிலை உருவாகியுள்ளது. எனவே ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்