அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க மறுத்த சீனியர் நடிகை – அதிர்ச்சியில் டோலிவுட்!

திங்கள், 16 நவம்பர் 2020 (17:19 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அனுகிய போது விஜயசாந்தி மறுத்துள்ளாராம்.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வந்தார். இந்த படம் ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இப்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு சினிமாவின் முன்னாள் லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தியிடம் கேட்ட போது அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்த செய்தி டோல்வுட்டில் தீயாய் பரவி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்