மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ்!

புதன், 4 நவம்பர் 2020 (18:25 IST)
மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் சமீபத்தில் ஒடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய்சேதுபதியின் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும், ஐஸ்வர்யாவின் நடிப்பு தேசிய விருது வாங்கும் அளவிற்கு தரமாக இருந்ததாக விமர்சனங்கள் வந்தன
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் ஒரு படத்தின் புரமோஷனுக்காக இணைந்துள்ளனர்.  இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரை சமூக வலைதளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஸ்ரீதர் வெங்கடேசன் என்பவர் இயக்கிய ’என் பெயர் ஆனந்தன்’ என்ற திரைப்படத்தின் டிரைலரை வரும் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற திரைப்படம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் இந்த படத்தின் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவியும் இந்த ப்டத்தில் நடிக்க உள்ளனர். இது ஒரு தனித்துவமான தமிழ்படம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்